/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/பயிர் கடன் வழங்க நடப்பு நிதியாண்டில் ரூ.40 கோடி: டி.ஆர்.ஓ., தகவல்பயிர் கடன் வழங்க நடப்பு நிதியாண்டில் ரூ.40 கோடி: டி.ஆர்.ஓ., தகவல்
பயிர் கடன் வழங்க நடப்பு நிதியாண்டில் ரூ.40 கோடி: டி.ஆர்.ஓ., தகவல்
பயிர் கடன் வழங்க நடப்பு நிதியாண்டில் ரூ.40 கோடி: டி.ஆர்.ஓ., தகவல்
பயிர் கடன் வழங்க நடப்பு நிதியாண்டில் ரூ.40 கோடி: டி.ஆர்.ஓ., தகவல்
ராமநாதபுரம்: ""பயிர் கடன் வழங்க நடப்பு நிதியாண்டில் 40 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக,'' பாலசுப்பிரமணியன் டி.ஆர்.ஓ., தெரிவித்தார்.
மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பங்கேற்ற அவர் பேசியதாவது: திருப்புல்லாணி நல்லிருக்கை கண்மாய் நடப்பு நிதியாண்டில் மராமத்து செய்யப்படும். கலுங்கு கட்டும் பணியும் அங்கு செய்து தரப்படும். களரி கண்மாய் மடைகளும் பழுதுபார்க்கப்படும். இடது, வலது பிரதான கால் வாய்கள் ஒருங்கிணைந்த நீர்பாசன மேலாண்மை திட்டம் பகுதி மூன்றில் மராமத்து செய்து தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
திருவாடானை வட்டத் தில் நெற்பழம் பாதிப்பு, கடலாடி பகுதியில் மழையில்லாமல் ஏற்பட்ட பாதிப்பு குறித்து அரசுக்கு அறிக்கை அனுப்பபட்டுள்ளது. அரசிடமிருந்து ஆணை வரப்பெற்றதும் நிவாரணம் வழங்கப்படும். விவசாய கடனைதவணை தேதிக்கு முன் செலுத்தினால் அதற்கான வட்டி தள்ளுபடி செய்யப்படும். நடப்பு நிதியாண்டில் பயிர்கடன் வழங்க 40 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மூடுதிரையில்லாமல் செல்லும் லாரிகள் மீதூ கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார். நேர்முக உதவியாளர் சவுந்தராஜன், கூட்டுறவு இணைப்பதிவாளர் பாபு, வேளாண் துணை இயக்குனர் ராஜேந்திரன் உட்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.